Sat. Dec 7th, 2024

உறவினரால் துஸ்பிரயோகம் செய்யப்படட சிறுமி கர்ப்பம், சிறிய தந்தை கைது

மட்டக்களப்பு பெரிய நீலாவணை பகுதியில் 16 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் சிறிய தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சம்மாந்துறை, , தம்பி நாயகபுரம் பகுதியை சேர்ந்த (வயது 23) சந்திரசேகரம் வசந்தன் எனும் திருமணமான நபர் ஆவார் என்று தெரியவருகிறது. சிறுமி தனியா இருந்த வேளையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்ற போதிலும் தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதனால் தாயரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த நிலையில் சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார். அவர் நேற்றைய தினம் மல்வத்தை தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றய தினம் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்