Fri. Jan 17th, 2025

உருக்கு உபதேசம் உனக்கல்லடி.. நிலையில் தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும்.

எழுக தமிழ் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவா்களில் ஒருவா் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தனிடம் கோாிக்கை விடுத்துள்ளாா்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர் வரும் 16ம் திகதி முன்னெடுக்கவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூரண ஆதரவை நல்க வேண்டும்

எனக் கோரிக்கை முன் வைத்துள்ளதோடு கட்சிகள் சார்பில் எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றலிற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூட்டமைப்பின் தலைவர்

போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் அரசியல் செயல்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் அதனால் எமது தரப்பினால் எந்த வகையான எதிர்ப்பு நடவடிக்கையோ அல்லது இடையூறுகளோ எவையுமே இடம்பெறமாட்டாது.

என்ற உத்தரவாத்த்தினை வழங்கியுள்ளார். இவ்வாறு இடம்பெற்ற உரையாடலின்போது எழுக தமிழில் பங்கு கொள்வது தொடர்பிலோ அல்லது கட்சியின் பங்களிப்புத் தொடர்பிலோ

எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவையில் உள்ள சில கட்சிகளும்,

இணை தலைவா்களில் ஒருவருமான சீ.வி.விக்னேஸ்வரனும் விமா்சித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த ஆதரவு கேட்கப்பட்டுள்ளது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்