உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி வாக்குமூலம் இன்று ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று காலை ஜனாதிபதி செயலகம் சென்றுள்ளது. காலை 10 மணிக்கு இந்த வாக்குமூலம் ஜனாதிபதியிடம் பெறப்படும் என்றும் இதற்கு ஊடகங்கள் எவையும் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு இந்த விசாரணை விடயங்கள் ஊடகங்களுக்கு வழக்கப்படமாட்டாது தெரிவுக்குழுவில் உறுப்பினர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி தெரிவித்துள்ளார்.
இந்த குழு கடந்த கால சாட்சிப் பதிவுகளை நாடாளுமன்றத் கட்டிடத்தொகுதியில் அதற்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தெரிவுக்குழுவில் முன்னர் இராணுவ அதிகாரிகள் , அரச அதிகாரிகள் , அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்கனவே வாக்குமூலங்களை வழங்கி இருந்தனர். இந்த தெரிவுக்குழுவில் முன்னர் தான் முன்னிலையாக மாட்டேன் என்றும் தெரிவுக்குழுவை கடுமையாக விமர்சித்து வந்த ஜனாதிபதி இறுதியில் வாக்குமூலம் வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது .கடைசியாக ஜனாதிபதியிடம் இடம்பெறும் விசாரணையை அடுத்து, தெரிவுக்குழு தனது அறிக்கையை சமர்பிக்கவுள்ளது.