உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளிடம் இருந்து 600 கோடி வரையான சொத்துக்கள் மீட்ப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரிகள் என்று சந்தேகபட்டவர்களிடம் இருந்து இதுவரை 6 பில்லியன் (600 கோடி) ரூபா கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி. ருவன் குணசேகர தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் பணம் மற்றும் பிற அசையும் அசையா சொத்துக்களின் மொத்தபெறுமதியே ரூ .6 பில்லியனுக்கும் அதிகமாகும் என்றும் , அவற்றை முடக்குவதற்கு சிஐடி ஆலோசனை பெற்றுவருகிறது என்று அவர் கூறினார்.
41 சந்தேக நபர்களின் நூறு வரையான வங்கிக் கணக்குகளில் ரூ .134 மில்லியனுக்கும் அதிகமான தொகை சிஐடியால் மீட்கப்பட்டுள்ள அதேவேளை , மேலும் ரூ .20 மில்லியனுக்கும் அதிகமான பணம் சிஐடி காவலில் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவல்களை வெளிப்படுத்த குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் 2 919 தொலைபேசி இலக்கங்களும் மற்றும் 169 மொபைல் தொலைபேசிகளின் ஐஎம்இ(I M E I )எண்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.