உயிருக்கு ஆபத்து!! -மைத்திரியிடம் பாதுகாப்பு கோரும் கோட்டா-

பொது ஜனபரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு பாதுபாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கிடைத்த பாதுகாப்பு குறித்தான தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ள கோட்டாபய , இது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
கோட்டாவின் தகவல்களையடுத்து அது தொடர்பில் முழு விசாரணை நடத்த அரச புலனாய்வுத்துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்கு இராணுவ புலனாய்வுத்துறையும் ஒத்துழைக்க கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு செயலருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என சொல்லப்பட்டது.