உயர்தர பெறுபேற்றில் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் சாதனை
மாவட்ட ரீதியில் கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தர உயர்தர பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்ட நிலையில் முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவர்களான மிஸ்ராஜ் நிடா பார்த்திமா விஞ்ஞான உயிரியல் பிரிவில் முதலிடத்தையும், ஆன்ரநீற்றா நிலூஜினி அருள்ஜெனிபற் வர்த்தக பிரிவில் முதலிடத்தையும் அத்துடன் ஜனோதினி தவபாலசிங்கம் வர்த்தக பிரிவில் மூன்றாம் இடத்தையும், பாணுஷா தர்மராசா நான்காம் இடத்தையும் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.