உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட கிரிக்கெட் லீக் சனிக்கிழமை நடாத்தும் போட்டிகளை பிற்போட கிரிக்கெட் ஆர்வலர்கள் வேண்டுகோள்
உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட கிரிக்கெட் லீக் சனிக்கிழமை நடாத்தும் போட்டிகளை பிற்போட கிரிக்கெட் ஆர்வலர்கள் வேண்டுகோள்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை போட்டிகளை நடாத்தாது பிற்போடுமாறு கிரிக்கெட் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் குறிப்பிடுகையில்
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட்டை வளர்க்கிறோம் என்று கூறி தொடர்களை நடாத்துபவர்கள் உயர்தர பரீட்சையை கருத்தில் கொள்ள வேண்டும் . சில கழகங்களில் பல இளைஞர்கள் உயர்தரப் பரீட்சை எழுதுவார்கள் அவ்வாறான வேளையில் கட்டாயம் விளையாட வேண்டும் என கட்டளை இடுவது சரியானது அல்ல. குறப்பாக குழு அறிவிக்கும் முன்னர் போட்டி அட்டவணை தயாரிக்காது போட்டியில் சில நாட்கள் முன்பு இவ்வாறான நெருக்கடி நேரங்களில் அறிவுறுத்துவது ஆரோக்கியமானது அல்ல.. இது போட்டி நாடாத்துபவர்கள் மீது நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கும் நிகழ்வாகும். அத்துடன் தொடரிற்கான அனுமதியை வழங்கி யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் நிச்சயமாக இதை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த தனி நபர் அல்லது கழகங்களை தான்தோன்றி தனமாக செயற்பட இடமளிக்க கூடாது. குறிப்பாக ஏற்கனவே தரப்பட்ட சட்டதிட்டங்களில் கூறப்பட்டுள்ளது. தரப்படும் அட்டவணையில் போட்டி விளையாட வேண்டும் என்பது இவ்வாறான நெருக்கடி வேளைகளில் ஏற்புடையானது அல்ல. குறிப்பாக போட்டியை நடாத்தும் குழுவினர்,யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் கவனம் எடுக்கவும் எனவும் கேட்டுள்ளனர்.