Sun. Apr 12th, 2026

உயரம் பாய்தலில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி கஜானா தங்கம் வென்றார்

கரவெட்டி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உயரம் பாய்தல் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைப் பிரதிநிதித்துவம் செய்த கே.கஜானா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கரவெட்டி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் இமையாணன் மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த கே.கஜானா தங்கப் பதக்கத்தையும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.ராகவி வெள்ளிப் பதக்கத்தையும், எஸ். யனுசிகா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed