உணவு கையாளும் நிறுவனங்கள் கௌரவிப்பு
யாழ் மாட்டத்தில் மொத்தம் 13 உணவு கையாளும் நிறுவனங்கள் கெளரவிக்கப்பட்டன. இந்த 13 நிறுவனங்களில் வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் இருந்து சுபாஸ் பேக்கரி. விண்மீன் பேக்கரி றாட்றனி தேனீர்கடை ஆகிய 3 உணவு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன . அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வடமாகாண சுகாதர அமைச்சால் வழங்கப்பட்டது.
பலகாலமாக சுகாதாரமற்ற உணவகங்களின் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், சுத்தமான உணவகங்களை ஊக்கப்படுத்தும் திட்டமானது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது