உடுவில் மகளிர் கல்லூரி தேசியத்தில் 5 பதக்கங்களை கைப்பற்றி சாதனை
200ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அகில இலங்கை தேசிய மட்ட பரதநாட்டியம் மற்று கர்நாடக சங்கீத போட்டியில் 5 முதலாமிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில்
உடுவில் மகளிர் கல்லூரியைப
பிரதிநிதித்துவம் செய்த
அபிசனா கோபிநாத் தனி நடனத்தில் முதலாமிடத்தையும், தேசிய மட்ட கர்நாடக சங்கீத தனிவயலின் போட்டியில் கேதுசா யுவராஜ் மற்றும் அபிசனா கோபிநாத் முதலாமிடங்களையும் தனிப்பாடல் போட்டியில் நிசாயினி செல்வநாயகம் முதலாமிடத்தினையும் மற்றும் பல்லிய குழுப்போட்டியில் முதலாமிடத்தையும் பெற்று உடுவில் மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.