Fri. Mar 21st, 2025

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியருக்கு “கலைப்பருதி” விருது

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியருக்கு “கலைப்பருதி” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை வல்வை முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வடமராட்சி பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் ஆற்றிய கலைச்சேவையைப் பாராட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நடனபாட ஆசிரியை திருமதி ஞானதர்சினி கிருபாகரன் அவர்களுக்கு கலைப்பருதி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவலகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ், கெளரவ விருந்தினராக வல்வை முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் நாகராஜா வர்ணகுலசிங்கம் மற்றும் மூத்த கலைஞர் கலாபூஷணம் யோ.இருதயராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்