Sat. Jun 14th, 2025

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களால் கடந்த 2ம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்களால் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு மாணவர்கள் அழைத்து கெளரவிக்கப்பட்டதோடு, சுமார் 900 மாணவர்களுக்கு கோழிக்கறியுடன் உணவு பரிமாறியுள்ளனர்.
இதற்கு நன்றி செலுத்தும் முகமாகவும் தற்போது சூழல் எதிர்கொள்ளும் பிரச்சனையையும் கருத்தில் கொண்டு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரிய தின நிகழ்வில் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் எனும் நல்லெண்ணத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மாணவர்களால் பயன்தரு மரங்களை வழங்கி முன்மாதிரியான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்