உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் திறன் வகுப்பறை கையளிக்கும் நிகழ்வு
மறைந்த தமிழ் எழுத்தாளர் ஐ.சண்முகன் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான திறன் வகுப்பறை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லூரியின் பிரதி முதல்வர் திருமதி. தர்சினி சற்குணராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்னாள் ஓய்வு நிலை அதிபர் செல்வி இராச்சியலக்சுமி சுப்பிரமணிய குருக்கள் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.