உடுப்பிட்டி பாடசாலை பரிசளிப்பு விழாவும், மைதான திறப்புவிழாவும்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் இன்று பரிசளிப்பு நிகழ்வும் கூடைப்பந்தாட்ட மைதான திரை நீக்கமும் நடைபெற்றது. மகளீர் கல்லூரி அதிபர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் S.சுகிர்தன் அவர்களும் மற்றும் வடமராட்சி கல்வி அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள். சிறந்த பாடசாலை மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது. இதன் பொழுது சிறந்த ஆசிரியர்களுக்கான பிரதிபா பிரபா விருது சு. சிவலிங்கம் கு.மனோகரன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது
