உடுத்துறை மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி

தாளையடி உடுத்துறை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் நடராசா தேவராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும், கிளிநொச்சி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மாவட்ட முகாமையாளருமான சண்முகையா சுபாஸ் கலந்து கொள்ள உள்ளார்.