Sun. Dec 8th, 2024

உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தா இந்த முக்கியமான ஊட்டச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம்…! உஷார்

பொட்டாசியம் நம் உடலுக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும், இது எலக்ட்ரோலைட் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடலின் அயனி சமநிலையை பராமரிக்க எலக்ட்ரோலைட்டுகள் மிகவும் அவசியமானவை. மற்ற எலக்ட்ரோலைட்டுகள் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், குளோரைடு போன்றவையும் முக்கியமானவை.
இந்த எலக்ட்ரோலைட்டுகள் உங்கள் ஆரோக்கிய அமைப்பை பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் உடலின் தசைகள் சீராக செயல்படவும் உதவுகிறது. உண்மையில், இது இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் அதன் பங்களிப்பைக் கொண்டுள்ளது, இது ஆரோக்கியமான இதயத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

பொட்டாசியம் குறைபாடு என்பது ஹைபோகாலேமியா எனப்படும் ஒரு வகையான மருத்துவ நிலையாகும். மனித உடலில் பொட்டாசியத்தின் இயல்பான அளவு 3.5-5.0 மிமீல்/லிக்குள் இருக்க வேண்டும். ஆனால் பொட்டாசியம் குறைபாடு தசை பலவீனம், நரம்பு கோளாறுகள், இதய பிரச்சினைகள், முதலியன உள்ளிட்ட கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீரகம் பொட்டாசியம் சமநிலையை நிர்வகிக்க அறியப்படும் உறுப்பு ஆகும், இது சிறுநீரின் மூலம் கூடுதல் பொட்டாசியத்தை நீக்குகிறது.

பொட்டாசியம் குறைபாட்டிற்கான காரணங்கள் –

உணவில் பொட்டாசியம் இல்லாதது

– நீரிழப்பு – வயிற்றுப்போக்கு

– அதிக வியர்வை

– பல மருந்துகளும் பொட்டாசியம் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன

பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

விரைவான மற்றும் அதிகமான களைப்பு உங்கள் தசைகள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு பொட்டாசியம் முக்கியமானது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரணுவும் திறம்பட செயல்பட தேவையான அளவு பொட்டாசியம் தேவைப்படுகிறது. எனவே பொட்டாசியத்தின் குறைபாடு நாள் முழுவதும் உங்களை சோர்வடையச் செய்யும். உங்கள் வழக்கமான வேலை உங்களை சோர்வடையச் செய்தால், உங்களுக்கு அடிக்கடி வியர்த்தால், நீங்கள் ஹைபோகாலேமியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

உயர் இரத்த அழுத்தம்

இரத்த நாளங்களை தளர்த்த உதவுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த பொட்டாசியம் இரத்த நாளங்கள் சுருங்குவதற்கு காரணமாக இருக்கலாம், இதன் காரணமாக உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

தசை பலவீனம்

உங்கள் தசைகளின் வலிமையை அதிகரிப்பதில் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இல்லாததால் எளிதில் தசை பலவீனம், வலிகள் மற்றும் பிடிப்பு ஏற்படலாம்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

உங்கள் இதயப் பிரச்சனை தொடர்பான எதுவும் உங்களை மோசமாக பயமுறுத்தலாம். குறிப்பாக நீங்கள் திடீரென இதயத் துடிப்பை அனுபவிக்கும் போது அல்லது உங்கள் இதயத் துடிப்பு இரட்டிப்பாகும் போது, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறைவான பொட்டாசியம் இத்தகைய படபடப்பு மற்றும் இதயத் துடிப்பை உருவாக்கும்.

தலைச்சுற்றல் உணர்வு

உங்கள் உடலில் பொட்டாசியம் இல்லாதது உங்கள் இதயத் துடிப்பைக் குறைத்து, உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் அல்லது நீங்கள் மயக்கம் அடைவதாக உணரலாம். இதுபோன்ற அறிகுறிகளுக்கு வேறு பல மருத்துவ நிலைமைகள் காரணமாக இருக்கலாம், ஆனால் ஹைபோகாலேமியா அவற்றில் ஒன்றாகும். மலச்சிக்கல் பொட்டாசியம் குறைபாடு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். வீக்கம், வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்திக்கலாம். உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு பொட்டாசியம் உங்கள் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் குறிப்பிடத்தக்கது. பொட்டாசியம் குறைபாடு உணர்வின்மை, உங்கள் கால்களில் ஊசி உணர்வுகள், மணிக்கட்டு போன்றவற்றை அனுபவிக்கலாம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்