உங்களுக்கு வீட்டில் பிரஷர் அளக்கும் போது நோர்மலாகவும் வைத்தியரிடம் அளக்கும் பொழுது கூடவாகவும் உள்ளதா ?
உங்களுக்கு வீட்டில் பிரஷர் அளக்கும் போது நோர்மலாகவும் வைத்தியரிடம் அளக்கும் பொழுது கூடவாகவும் உள்ளதா ? யோசிக்கவேண்டாம்!! நீங்க செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உயர் இரத்தஅழுத்துக்கான மருந்தை மருத்துவரின் ஆலோசனைபடி எடுக்கவேண்டியது தான். நம்மில் பலர் இதை அளக்கும் கருவியில் உள்ள பிழையாக கருதுகின்றோம். அமெரிக்காவில் செய்யப்பட் ட புதிய ஆராச்சி ஓன்று இதை ஒருவகை மருத்துவ குறைபாடாக விபரித்துள்ளார்கள்.
இப்படியான நிலைமை உடையவர்கள் உயர்இரத்த அழுத்தத்துக்கான மாத்திரையை எடுக்க வேண்டும் என்றும் , அவ்வாறு எடுக்க தவறின் சாதாரண இரத்த அழுத்தம் உள்ளவர்களை காட்டிலும் 200% இதயநோய் தாக்கத்தினால் இறக்க நேரிடலாம், இவ்வாறு அந்த ஆராச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உண்மையான புரிதல் வைத்தியர்களிடம் இல்லாத போதிலும் இதனை அவர்கள் ‘white coat hypertension ‘ என வரையரை செய்துள்ளார்கள். சில நோயாளிகளுக்கு வைத்திய உபகரணங்களை அவர்களிடத்தில் பொருத்தும் போது இயல்பாக ஏற்படும் பயத்தினால் கூட இருக்கலாம் அல்லது சிலருடைய உடல்வாகுவை கூட பொறுத்து இருக்கலாம் என்று வைத்தியர்கள் கருதுகிறார்கள்.
இரத்த அழுத்தமானது இரதம் நாடி நாளம் மயிர்துளைகுழாய்கள் வழியாக செல்லும் பொழுது பொதுவாக ஏட்படும். இந்த அழுத்தமானது உயர்வாக இருக்கும் பொழுது இதை உயர் இரத்த அழுத்தம் ‘hyper tension அல்லது high blood pressure ‘ என்பார்கள். பொதுவாக 130/90 க்கு மேல் இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்பார்கள் . முதலாவது இலக்கம் இதயம் இரத்தத்தை பாச்சி அடிக்கும் போதும் மற்றயது இதயம் ஓய்வில் இருக்கும் போதும் உள்ள இரத்த அழுத்தமாகும். இந்த ஆராச்சியில் 64000 பேர் ஆசியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஈடுபடுத்தப்படடார்கள். அமெரிக்காவில் ஐந்தில் ஒரு வயது வந்தவர்கள் இந்த நிலைமைக்கு உட்பட்டிருக்கலாம் என்றும் இந்த ஆராச்சியின் கண்டறிந்துள்ளார்கள்.
இந்த நிலைமைக்கு மருந்து பவிக்காதவர்கள் 36% அதிகரித்த இதயநோய் தாக்கத்துக்கும் 33% அதிகரித்த இறப்பையும் வேறு பல காரணங்களாலும் 109% அதிகரித்த இறப்பை இதயநோயினாலும் எதிர்கொள்ளநேரிடும்.
இதை புரிந்துகொள்ள மேலும் பல ஆராச்சிகள் செய்யவேண்டிஇருப்பினும் , நல்ல உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்ச்சி, மட்டுப்படுத்தப்படட மது பாவனை மற்றும் புகைத்தல் தவிர்ப்பு மூலம் இந்த நிலைமைக்கு ஆளாகாமல் தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.