ஈ.பி.டி.பியும், இராணுவ சிப்பாய் இணைந்து தொடர் கொள்ளை!! -ஆயுதங்களுடன் மடக்கிப்பிடிப்பு-
மட்டக்களப்பில் வேவ்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கொண்ட குழுவினர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பார் வீதியால் வந்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட வேளை அதில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடந்த முதற்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டதுடன், கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைத்துப்பாக்கியும் அதற்காக பயன்படுத்தப்படும் பத்து துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் ஈபிடிபி உறுப்பினரும், முன்னாள் இராணுவ சிப்பாயுமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.