ஈஸ்டர் தாக்குதல்!! -விசேட ஆணைக்குழு நியமித்த மைத்திரி-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 5 பேர் அடங்கிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணைக்குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதியரசர் ஜனக்க டிசில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக் குழுவில் மேன்முறையீட்டு நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன, இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து மற்றும் இளைப்பாறிய அமைச்சுச் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த ஆணைக் குழுவானது எதிர்வரும் 6 மாதங்களுக்குள் தமது விசாரணைகளை பூர்த்தி செய்யவுள்ளது.