Thu. May 21st, 2026

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீது அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிரடி காட்டிய ஈரான்

ஈரானின் உயர் இராணுவ அதிகாரியை கொன்றதற்கு பழிக்கு பழியாக இன்று புதன்கிழமை அதிகாலை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இதன் பொழுது மொத்தம் 12 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் சேதவிபரங்களை கணக்கிடுவதாகவும் எல்லாம் நல்லாகவே உள்ளது என்று அமெரிக்கா ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இராணுவ அதிகாரியை கொன்றதன் பின்னர் ஈரானுக்கு அமெரிக்கா ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கையை ட்விட்டரில் விடுத்திருந்தார். அமெரிக்கா சொத்துக்கள் மீதோ அமெரிக்கா குடிமகன் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரானில் உள்ள 52 இலக்குகள் உடனடியாக தாக்கி அழிக்கப்படும் என்றும் இவை மிக விரைவாகவும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை தாக்குதலுக்கு பின்னர் ட்விட்டர் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப் , எல்லாம் நல்லாகவே உள்ளது என்றும் , நாளை காலை தன நாட்டு மக்களுக்கு பேசவுள்ளதாகவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார் . அமெரிக்காவின் பதிலடி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed