ஈரல் கறியில் புழுக்கள்- பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு
கொடிகாமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஈரல் கறியில் புழுக்கள் காணப்பட்டதாக அப்பகுதி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பகுதியில் உள்ள உணவகமொன்றில் பொதுமகன் ஒருவரினால் உண்பதற்காக உணவு வாங்கப்பட்டுள்ளது. வாங்கப்பட்ட உணவில் ஈரல் கறியில் புழுக்கள் நெளிவதை அவதானித்துள்ளார். இது தொடர்பாக குறித்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக குறித்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, பொதுமகன் ஒருவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் உள்ளதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை, இருப்பினும் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வுணகத்தில் பழுதடைந்த உணவுகள் விற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.