இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்!
இ.போ.சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது வாகனோி பகுதியில் வைத்து இனந்தொி யாத நபா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனா்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி என்னும் இடத்தில் இன்று பயணித்தபோதே இனந்தெரியாத நபர்கள் சிலர்
சாரதியின் முன்பக்க கண்ணாடிக்கு கல்லெறிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் பயணிகள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்
சாரதியின் முன்பக்க கண்ணாடி மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.