Thu. Sep 17th, 2026

இ.போ.ச சாரதியின் பொறுப்பற்றதனம். இருவா் படுகாயம்.

வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் இ.போ.ச சாரதியின் பொறுப்பற்ற சாரத்தியத்தால் 3 வாகனங்கள் தொடா் விபத்துள்ளானதில் இருவா் படுகாயமடைந்துள்ளனா்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள தமது வீட்டிலிருந்து நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு முன்பாக

வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை எதிர் திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் , காா் ஒன்றை முந்திச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையும்

சேர்த்து முறையற்ற விதத்தில் முந்திச் செல்ல முற்பட்ட பஸ் மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்தில் 30,25 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

About The Author

Share This:

Leave a Reply