Sun. Sep 8th, 2024

இவ்வாண்டுக்கான சூரிய கிரகணம் ஆரம்பம்

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய சூரிய கிரகணம் தற்போது நிகழ்கிறது,
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 20 ஆம் தேதி) நிகழ்கிறது,
இந்த ஆண்டு மொத்தம் நான்கு கிரகணங்கள் நிகழ உள்ளது. அதில், இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள். “சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு சூரிய கிரகணம் என்று பெயர். சூரியனை நிலா மறைப்பதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது”

“இந்த சூரிய கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது”

அந்த வகையில்,
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி நிகழும் என்பதுடன், இது சூரிய கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது.

மே 5ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் அதிகாலை 1 மணிக்கு முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த ஆண்டின் 2ஆவது சூரிய கிரகணம் ஒக்டோபர் 14ஆம் திகதி நிகழும் அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் புலப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆண்டின் 4ஆவதும் கடைசியுமான சந்திர கிரகணம் ஒக்டோபர் 29ஆம் அதிகாலை 1.06 மணிக்கு ஆரம்பமாகி 2.22 மணிக்கு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கிரகணம் ஜோதிட சாஸ்திரப்படி, இந்த கிரகணம் மேஷம் ராசி மற்றும் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. எனவே, இது கலப்பின சூரிய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவற்றின் கலவையாகும். இது, நெருப்பு வளைய சூரிய கிரகணமாக தோன்றும் இந்த கிரகணம் முழு வளைய கிரகணமாக தோன்றுவதற்கு முன், சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் நெருப்பு வளைய கிரகணமாகத் தோன்றுவதால் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரணம் என அழைக்கப்படுகிறது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ‘ஹைபிரிட்’ சூரிய கிரகணம் நிகழ்வதால் இதற்கு ‘நிங்கலூ எக்லிப்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது என்பதால் இதன் தாக்கம் நமக்கு ஏற்படாது. இருப்பினும் கர்ப்பிணிப்பெண்களுக்கு இந்த கிரகணம் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, சூர்ய கிரகணம் ஆரம்பம் முந்தைய அசுபமான நேரம் ‘சூதக்’ (Sutak) என்று அழைக்கப்படுகிறது. அதாவது தோஷ காலம். இந்த காலத்தில், பூமியின் வளிமண்டலம் மாசுபடுவதாக நம்பப்படுகிறது. இதுபோன்ற மாசுபாட்டால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளைத் தவிர்க்க கூடுதல் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கலாச்சாரத்தின் அடிப்படையில் மட்டுமே சூரிய கிரகணம் நல்லது அல்லது கெட்டது என்று பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கிரகணத்தை கெட்ட சகுனமாகக் கருதும் பல கட்டுக்கதைகள் அல்லது நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இது இயற்கையான நிகழ்வு என்பதை யாரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.

ஜோதிட நம்பிக்கையின் படி, பல ஆண்டு காலமாக சூரிய கிரகணம் கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் போது கர்ப்பமாக இருக்கும் பெண்கள், சூரியன் அல்லது சந்திரனின் நேரடி கதிர்களை பார்த்தாலோ அல்லது உடலில் விழுந்தாலோ பிறக்கும் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

இருப்பினும், கிரகணம் நெருங்கும் போது உங்கள் கருவில் இருக்கும் குழந்தையை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பற்றி நாங்கள் கூறுகிறோம் :

1. சூரிய கிரகணம் முடியும் நேரம் வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

2. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தடிமனான திரைச்சீலைகளை கொண்டு மூடி வைக்கவும். இதனால், வெளியில் உள்ள தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையாது.

3. சூரிய கிரகணத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பார்க்க வேண்டாம்.

4. சூரிய கிரகணத்தின் போது தூங்குவதைத் தவிர்க்கவும்.

5. ஊசிகள், கத்தரிக்கோல், கத்திகள் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

6. ஏதேனும், காயத்திற்கு வழி வகுக்கும் அபாயகரமான செயல்களில் ஈடுபடாதீர்கள்.

7. கிரகணத்தின் போது, எந்த உணவையும் சாப்பிடுவதையோ அல்லது சமைப்பதையோ தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. கிரகணத்தின் எதிர்மறை விளைவுகள் உங்கள் உணவை மாசுபடுத்தும் என்று நம்பப்படுகிறது. இது எங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை பாதிக்கலாம். இருப்பினும், நீங்கள் பசியாக உணர்ந்தால், நன்கு கழுவப்பட்ட பழங்களை மட்டுமே உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கிரகணத்திற்குப் பிறகு புதிதாக சமைத்த உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

8. கிரகணத்தின் போது அல்லது அதற்கு முன் உங்கள் முடி அல்லது உடலில் எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது கிரகணத்தின் எதிர்மறை விளைவுகளை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

9. கிரகணம் முடிந்த பிறகு, கர்ப்பிணிப் பெண்கள் குளிக்க வேண்டும். ஏனென்றால், சூரிய கிரகணத்தின் சாத்தியமான எதிர்மறை விளைவுகளைக் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

மேலும், இன்று நிகழும் சூரிய கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணமுடியாது எனவும்,
ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது 62 வினாடிகளுக்கு சூரியன் பூமியை மறைக்கப்படும் காட்சி தெரியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்