இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சாதனை

இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ப.ஜானகன் தங்கப் பதக்கத்தைப் பெற்று கல்லூரி சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி நேற்று சனிக்கிழமை கொழும்பில் முடிவடைந்தது.
இதில் 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ப.ஜானகன் முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் ப.ஜானகன்
சதுரங்கத்தில் தங்கப் பதக்கம் பெற்றமை கல்லூரி சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.