இளைஞர் தேசிய மட்ட வலைப்பந்தாட்டம் யாழ் மாவட்ட இளைஞர் அணி போராடி ஒரு புள்ளியால் சம்பியன் கிண்ணத்தை நழுவ விட்டனர்
அகில இலங்கை இளைஞர் அணிகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் யாழ் மாவட்ட இளைஞர் அணியினர் இறுதியாட்டங்களில் பலத்த போராட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
அகில இலங்கை இளைஞர் அணிகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டி கம்பகாவில் நடைபெற்றது.

ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து இரத்தினபுரி மாவட்ட இளைஞர் அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரத்தினபுரி மாவட்டம் இளைஞர் அணி அடுத்தடுத்து புள்ளிகளை பெற யாழ் மாவட்ட அணி ஆட்டத்தில் தடுமாற்றம் கண்டது. இருப்பினும் இரண்டாவது பாதியாட்டத்தை சாதகமாக்கி தமது அபாரமான ஆட்டத்தை யாழ் மாவட்ட இளைஞர் அணி வெளிப்படுத்தி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்து தொடர்ந்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் மாவட்ட இளைஞர் அணி 18:19 என்ற ஒயு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

இதேபோல் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து குருநாகல் மாவட்ட இளைஞர் அணி மோதியது. இதிலும் இறுதிவரை போராடிய யாழ் மாவட்ட இளைஞர் அணி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.