Sat. Dec 6th, 2025

இளைஞரை கொலை செய்த சந்தேக நபர்கள் கைது, அண்ணனுக்கா கொலை செய்தோம் முதற்கட்ட விசாரணையில் தெரிவிப்பு

வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சந்தேக நபர்களை காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலீஸார் கைது செய்து நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
கொலை செய்தவர்கள் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் கொலைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் என்பவற்றையும் பொலீஸார் கைப்பற்றினர். இதில் ஒருவர் தமிழர், இன்னொருவர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வடமராட்சி கரணவாய் கூடாவளவு பிரதேசத்தில் கரணவாய்  பகுதியைச் சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்பவர் அண்மையில் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரான்ஸில் வசிக்கும் தமது சகோதருக்காக கொலை செய்ததாகவும், பிரான்ஸில் வசிக்கும் சகோதரருக்கும் பிரிந்தனுக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டது. பிரிந்தன் பிரான்ஸிற்கு வந்தால் தான் உயிருடன் இருக்க முடியாது எனவும், இதனால் ஏற்கனவே சில குழுக்களுக்கு பிரிந்தனை கொலை செய்வதற்கு பணம் வழங்கிய போதிலும், பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றியதாகவும், இதனால் சகோதரனுக்காக தாமே கொலை செய்து அவரின் தொலைபேசியையும் எடுத்துச் சென்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி விசேட காரிலயத்து புலனாய்வு உத்தியோகத்தரின் தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை மாவட்ட பொலீஸ் அதிகாரி அம்பேபிட்டய அவர்களின் கட்டளையின் பிரகாரம் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினரான பொலீஸ் பரிசோதகர் சாளிக்க, உப பரிசோதகர் நயனதார, உப பரிசோதகர் ஜெயமான மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர்களான லம்பேட், அனோஜன், சோபன்ராஜ், சஜீபன் லுக் சன், தஸ்மின், குமார, செனவி, வீரசேன, சமத், உப்புல், ரத்னாயக்க, சில்வா, ஆகியோர் இணைந்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆயர்படுத்தினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்