இளைஞன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சம்பவத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த அருண் அபிஷேக் (வயது 18) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.