இளைஞனை மோதி கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாகனம், நீர்வேலி பகுதியில் பரபரப்பு, விரைந்து தேடும் பொலிஸார்
19.09.2019 அன்று இரவு 10 மணியளவில் நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் அண்மித்த பகுதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் பிறந்தநாள் வைபவத்திற்கு சென்று வீடு நோக்கி செல்லும் போது தொண்டமனாறு கெருடாவிலைச் சேர்ந்த அருந்தவராயா அரவிந்தன் 22 வயது இளைஞன் சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் வந்தவர் காயங்களுடன் யாழ் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் ஒடி வந்த மோட்டர் சைக்கிள் சின்னபின்னம் ஆகியது. அவர்களை மோதிய வாகனம் தலைமறைவாகி உள்ளது. தற்பொழுது பொலிசார் வாகனத்தை தேடிவருகின்றர்கள்.