Sun. Dec 8th, 2024

இளம் பெண்ணைக் கடத்த முற்பட்டோர் பொலீஸார் மடக்கிப் பிடித்தனர் வவுனியாவில் பதற்றம் 

கயஸ் வான் மற்றும் ஆட்டோக்களில் வந்து 11 பேர் இளம் பெண்ணைக் கடத்த முயன்றுள்ளனர். தகவல் அறிந்த பொலீஸார் அனைவரையும் மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு வவுனியா மரத்தடி காஞ்சனாமோட்டை எனும் பகுதியில் நடைபெற்றது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது
வவுனியா மரத்தடி காஞ்சனாமோட்டை எனும் பகுதியில் வீடு நிர்மாணிப்பு வேலையில் ஈடுபட்டவர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்குள் நேற்று இரவு புகுந்து அவரை பலாத்காரமாக வெளியே இழுத்துள்ளனர். இவரின் அலறல் சத்தம் கேட்ட அயல் வீட்டுக்காரர்கள் பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலீஸார் 250-8118 எனும் இலக்கம் கொண்ட  கயஸ் வான் மற்றும் EP YR – 9174 எனும் ஆட்டோவையும் மற்றும் 11 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதனால் வவுனியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்