இளம் பாடகருக்கான தேசிய விருதை மகாஜனக் கல்லூரி மாணவி மதுவந்தி முதலிடம் பெற்றார்.
இளம் பாடகருக்கான
தேசிய விருதை மகாஜனக் கல்லூரி மாணவி மதுவந்தி முதலிடம் பெற்றார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இளம் பாடகருக்கான போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி மதுவந்தி மயூரன் முதலாம் இடம் பெற்று இளம் பாடகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். இதில் 15 தொடக்கம் 29 வயது வரையான பிரிவில் மிகவும் குறைந்த வயதில் மதுவந்தி இவ்விருதைப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். மாகாண மட்டத்தில் 150 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் பங்குபற்றி முதலிடம் பெற்றார். இப் போட்டியில் பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள் என பலர் பங்குபற்றி இருந்தும் மதுவந்தியின் தனித்திறமையால் முதலிடம் பெற்றுள்ளார். இப்பாடலை மகாஜனக்கல்லூரி பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியருமான பார்வதிநாதசிவம் பாலமுரளி இயற்றி வழங்கியுள்ளார்.
இப்பாடலுக்கு இசை அமைத்தவர் எமது கல்லூரி முன்னாள் இசை ஆசிரியர் செல்வி முருகையா ஜெயகௌரி. பின்னணி இசை வழங்கியவர் முரளி(சத்தியன்) என்பதும் குறிப்பிடத்தக்கது.