இலங்கை வங்கி ATM இயந்திரத்தை உடைத்து திருட முற்பட்ட பிரதேசசபை ஊழியா் பணி நீக்கம்.

முழங்காவில்- நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர்
என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான பிரதேசசபை ஊழியா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
மேற்படி பணப்பாிமாற்ற இயந்திரப் பகுதிக்குள் கடந்த 2ம் திகதி இரவு 6 போ் வந்து நீண்ட நேரம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட நிலையில் இறுதியில் முயற்சி தோல்வியடைந்த நிலையில் வெளியேறியுள்ளனர்.
இருப்பினும் இவ்வாறு இயந்திரத்தை உடைக்க முயன்ற மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்டமை வங்கியில் ஒளிப்படம் ஆகியிருக்கிறது.
இவ்வாறு பதிவாகிய புகைப்படங்களின் உதவியுடன் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரதேச சபை ஊழியர்
எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறும் நிலையில் குறித்த பணியாளரை சபை இடைநிறுத்தம் செய்துள்ளது.