இலங்கை ரூபா கடும் வீழ்ச்சி

கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்ட வட்டி வீதக் குறைப்புக்குப் பின்னர், அரசாங்கப் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் இருந்து தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதால், இலங்கையின் ரூபாய் வியாழக்கிழமை மேலும் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஏழு மாதங்களில் நேற்றையதின ஆகக்குறைந்த மட்டத்தை அடைந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 25.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள அரசாங்கப் பத்திரங்களை விற்றுள்ளதாகவும் இந்த ஆண்டில் மொத்தமாக 53.2 பில்லியன் ரூபா பணம் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் நாட்டை விட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் நேற்று அமெரிக்கா டொலருக்கு எதிராக 180.80/181 என்ற நிலையில் இலங்கை ரூபா இருந்தது. இது கடந்த ஜனவரி 28 ஆம் திகதியை இருந்ததை விட வீழ்ச்சி அடைந்துள்ளதாக மதியவங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன