இலங்கை மெய்வல்லுநர் பரீட்சை தரம் 1இல் வடமாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் சித்தி
இலங்கை மெய்வல்லுநர் பரீட்சை தரம் 1இல் வடமாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் சித்தி அடைந்துள்ளனர். இவர்கள் தேசிய மெய்வல்லுநர் தீர்ப்பார்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உலக மெய்வல்லுநர் சங்கத்தில் ஆங்கில மொழி மூலமான எழுத்துப் பரீட்சை நடைபெற்று கடந்த கிழமை தியகம மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள போட்டியில் செயன்முறை பரீட்சையும் நடைபெற்றது. குறித்த பரீட்சையில் வடமாகாணத்தை சேர்ந்த 8 பேர் உட்பட இலங்கையில் 22 பேர் சித்தி அடைந்துள்ளனர். இதில் வடமாகாணத்தை சேர்ந்த (இடமிருந்து வலமாக)
ந.சிவநேசன் (ஆசிரியர்
வ /முஸ்லீம் மகா வித்தியாலயம் வவுனியா.)
க.துற்ஜெயந்தன் (ஆசிரியர்
யா/ நல்லூர் இந்து தமிழ் கலவன் பாடசாலை.)
த.ராதாகிருஷ்ணன் (ஆசிரியர் கிளி/ சென் திரேசா மகளீர் கல்லூரி,
கிளிநொச்சி.)
அ. றொஸ்கோ (ஆசிரியர்
கிளி/முழங்காலில் மத்திய மகா வித்தியாலயம்.)
லோ.விஸ்வநாதன்
(நிர்வாக உத்தியோகத்தர்,
பிரதம செயலாளர் செயலகம்,
வடமாகாணகம்)
ந.பிரதாஸ்
(அதிபர்
வ/கிறிஸ்தோகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
செட்டிகுளம்
வவுனியா.)
த. கருணாகரன்
(ஓய்வு நிலை உத்தியோகத்தர்
இலங்கை வங்கி.)
சி. சிவதீபன்
(தி /சென் ஜோசப் கல்லூரி திருகோணமலை.) ஆகியோரே சித்தி அடைந்துள்ளனர்.