இலங்கை மாணவி கார் விபத்தில் ஆஸ்திரேலியாவில் பலி
மோனாஷ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நிசாலி பெரேரா, நேற்று இரவு மெல்போர்னின் நகரின் தென்கிழக்கு பகுதியில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
இந்த மாணவி மோனாஷ் பல்கலைக்கழகத்தில் இருந்து இரவு 10 மணிக்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது,பாதசாரி கடவையில் கார் மோதி உயிரிழந்துள்ளார். இவரை மோதிய பொழுது 20மீட்டர் தூரம் வரை தூக்கிவீசப்பட்டதாகவும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட கமெராவில் பதிவாகியுள்ளது.
அதிவேகமாக வந்த கார் பாதசாரிக்கடவையில் தரிக்காது சென்றதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் , சம்பந்தப்பட்ட கார் விபத்து நடந்த இடத்தில இருந்து 700 மீட்டர் தூரத்தில் கைவிடபட்டநிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இதைப்பற்றிய தகவல் தெரிந்தவர்களை உடனடியாக பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்