இலங்கை தேசிய சிறுவர் சபை தேர்தலில் மகாஜன கல்லூரி மாணவன் வெற்றி

யா/மகாஜனக் கல்லூரி மாணவன் மரியசீலன் எலக்ஸ்ரின்ராஜ், இலங்கை தேசிய சிறுவர் சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இப்போட்டி அண்மையில் குருநாகலில் நடைபெற்றது.
பிரதேச செயலகங்களூடாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த யா/மகாஜனக் கல்லூரி மாணவன் மரியசீலன் எலக்ஸ்ரின்ராஜ் இலங்கை தேசிய சிறுவர் சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த மாணவன் யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது வட மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பதும் குறிப்பிட்டதக்கது.