இலங்கை தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம்

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.
16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடர்
எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை ஜோர்டானில் நடைபெறவுள்ளது.இக் கால்பந்தாட்ட தொடரிலேயே இவர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.