Sun. Dec 8th, 2024

இலங்கை தமிழ் குடும்பத்தை நாடுகடத்த முயற்சித்த ஆஸ்திரேலியா குடிவரவு துறை , நடுவானில் நடந்த நாடகம்

ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் இலங்கை தமிழ் புகலிடம் கோரும் குடும்பத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்துவதை நள்ளிரவில் தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.

நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரண்டு மகள்களையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பலவந்தமாக அவர்களை அகற்றப்பட்ட வழக்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பை தூண்டியது.

ஆனால் அவர்கள் அகதிகள் அல்ல என்று கூறி ஆஸ்திரேலியா வெள்ளிக்கிழமை அவர்களை வெளியேற்றியதை ஆதரித்தது. “அவர்கள் எங்கள் நாட்டினால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல” என்று உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.குடிவரவு அதிகாரிகளால் குடும்பத்தின் புகலிடம் கோரிக்கை விரிவாக மதிப்பிடப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். பெற்றோர் மற்றும் அவர்களது முதலாவது குழந்தைக்கான முறையீடுகள் நிராகரிக்கப்பட்டிருந்தன

குடும்பத்தின் பெற்றோர், நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி ஓடிய பின்னர் ஆஸ்திரேலியாவில் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வயது தருணிகா மற்றும் அவரது நான்கு வயது சகோதரி கோபிகா இருவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்.

கடந்தகால அரசியல் தொடர்புகள் காரணமாக இலங்கைக்குத் திரும்பினால் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் தடுப்பு நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதற்கு முன்னர், இந்த குடும்பம் மூன்று ஆண்டுகளாக நகரமான பிலோலாவில் வாழ்ந்து வந்தார்கள். குடிவரவு அதிகாரிகள் நடத்திய விடியல் சோதனை, அந்த சமூகத்திலிருந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . அவர்களை திருப்பி அனுப்புவதை எதிர்த்து 120000 கையெழுத்துக்களை திரடப்பட்டது

குடும்பத்தினர் சில மணி நேரங்களுக்குள் நாடு கடத்தப்படுவார்கள் என்பதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வியாழக்கிழமை இரவு மெல்போர்ன் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.

அவர்களது விமானம் உள்ளூர் நேரப்படி சுமார் 23:00 மணிக்கு (12:00 GMT) புறப்பட்டது, ஆனால் விமானத்தின் போது, ​​தரூனிகா நாடு கடத்தப்படுவதைத் தடுக்கும் கடைசி நிமிட உத்தரவைப் பெறுவதில் வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றனர்.

அந்த உத்தரவு, நீதிபதியால் தொலைபேசி வழியாக அறிவிக்கப்படத்தையடுத்து , விமானம் 3,000 கிமீ (1,850 மைல்) தொலைவில் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியான டார்வினில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தரையிறக்கபட்டது .

அவர்களது நண்பர் ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ் செய்திநிறுவனம் ஒன்றுக்கு கூறுகையில் குடும்பம் “ஒரு பெரிய உணர்ச்சி பாதிப்புக்குள்ளாகி மிகவும் துயரத்தில் உள்ளதாக கூறினார்

விமானத்தின் போது சிறுமிகள் அழுததாகவும், பிரியா தனது குழந்தைகளுடன் உட்கார அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல ஆஸ்திரேலியர்கள் குடும்பத்தை நடத்திய விதம் குறித்து வலைத்தளத்தில் கோபத்தை வெளிப்படுத்தினர் மற்றும் அரசாங்கம் இரக்கம் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில் இந்த தடையானது வரும் புதன் கிழமை மட்டுமென்பதால் அதன் பின்னர் அந்த குடுமப்த்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்