Thu. Jan 23rd, 2025

இலங்கை சகல மக்களுக்கும் சொந்தமான நாடு. காவி உடை அணிந்து கொண்டு வெறியாட்டம் ஆடாதீா்கள்.

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீா்குலைத்து, நீதிமன்ற தீா்ப்பை அவமதித்து காவி உடையுடன் வெறியாட்டம் ஆடாதீா்கள், சண்டித்தனம் காட்டாதீா்கள்.

மேற்கண்டவாறு அமைச்சா் ராஜித சேனாரத்ன கூறியுள்ளாா். நேற்றய தினம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில்

பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடா்பாக கருத்து கூறும்போது அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், நடந்த சம்பவம் நாட்டுக்குத்தான் அவமானம். இந்த நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் – சகல மதத்தவர்களுக்கும் சொந்தமான நாடு.

இதில் நான் பெரிது – நீ சிறிது என்ற பாகுபாடு வேண்டாம். நாட்டின் நீதித்துறைக்கு அனைவரும் தலைவணங்கியே ஆக வேண்டும்.

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடியில் பிக்குகள் நடந்துகொண்ட விதம் அருவருக்கத்தக்கது. இது இறந்த விகாராதிபதியை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்