Thu. Mar 12th, 2026

இலங்கை கீரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ் திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள் நால்வர் தெரிவு

இலங்கை கீரீடா சக்தி கூடைப்பந்தாட்ட அணிக்கு யாழ் திருக்குடும்ப கன்னியர் மட  அணியை சேர்ந்த 4மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 28.02.2025 அன்று கொழும்பு புளூஸ் கூடைப்பந்தாட்ட திடலில் இத் தெரிவு  இடம் பெற்றது.
இதில் யாழ் திருக் குடும்ப கன்னியர் மட அணியைச் சேர்ந்த
சகானா விஜருபன்,
எஸ்தார் ஜாக்சன், டிலான் காசில்டா, ஆர்.  லோட்சி ஆகிய 4பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர். இவர்களுக்கான பயிற்சிகளை பயிற்றுவிப்பாளர் சோபனா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed