இலங்கை கிரிக்கெட் மத்தியத்தர்கள் சங்க யாழ்ப்பாண கிளையின் தலைவராக ந.சுதேஸ்குமார் தெரிவு

இலங்கை கிரிக்கெட் மத்தியத்தர்கள் சங்க யாழ்ப்பாண கிளையின் தலைவராக ந.சுதேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் மத்தியஸ்தர்கள் சங்க யாழ்ப்பாண கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 18ம் திகதி கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வருடத்தின் செயற்குழு அங்கத்தவர்களாக பின்வருவோர் தெரிவாகினார்கள். இதில்
தலைவராக ந.சுதேஸ்குமார், செயலாளராக முருகவேல்,
பொருளாளர் மற்றும் உபசெயலாளராக க. யுதிஸ்ரன்,
உபதலைவர்களாக த. கிருபாகரன், ஞா. ஞானதயாளன், ந. சிவராஜ், சோ. ஹரிதரன், க. நாதன் ஆகியோரும்

செயற்குழு உறுப்பினர்களாக கி. செல்வராசா பா. கஜதீபன், செ. ஞானகுமார், தே. றொபேசன், சி. மதுஸன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.