இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு முதலாவது தமிழர் தெரிவு

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேசிய ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு 5 ஆளணி வெற்றிடங்களே காணப்பட்டுள்ளது. இதில் முதன் முறையாக தமிழர் ஒருவர் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.