இலங்கை எறிபந்தாட்ட தேசிய அணிகளுக்கு முதன் முறையாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் தெரிவு

இலங்கை எறிபந்தாட்ட தேசிய அணிகளுக்கு முதன் முறையாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய எறிபந்தாட்ட பெண்கள் அணிக்கான தெரிவு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவிகளான பகீரதன் கிருத்திகா, பகீரதன் ரேணுகா, பாஸ்கரன் சதுர்ஜா, விகாசன் ஜோகிதா ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட எறிபந்தாட்ட போட்டியில் கடந்த காலங்களில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தமையும், குறித்த அணிகளுக்கு பயிற்சியை வழங்கியவர் உடற்கல்வி ஆசிரியர் நடேசன் செந்தூரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.