இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்றும் நாளையும் நடைபெறவுள்ள சுகயீனப் போராட்டத்திற்கு முதல் நாளாகிய இன்று வடமாகாண அதிபர் ஆசிரியர்கள் தமது முழு ஆதரவு வழங்கியுள்ளனர்.
சுகயீனப் போராட்டத்தின் முதலாவது நாள் வடமாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் எவரும் கடமைக்குச் செல்லவில்லை. பாடசாலை மாணவர்கள் பலர் வருகை தரவில்லை. வருகை தந்த மாணவர்களும் நிலமையை கருத்தில் கொண்டு வீடு திரும்பினர்.
இரு தினங்களிலும் காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெறும் போராட்டத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் – போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.
அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது.
ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.
பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது.
ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.
தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது.
இதற்கான தீர்வினைப் பெறுவதற்காகவே இந்த சுகயீனப் போராட்டம் நடைபெறுகிறது