இலங்கை அணிக்கு வரலாற்று நிகழ்வொன்றை காட்டுவேன்!! -சாவல் விடும் சர்பராஸ் அகமட்-

இலங்கை அணிக்கு எதிராக நாளை மறுதினம் 27 ம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும் என்று பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அகமட் தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கராச்சியில் ஒரு நாள் போட்டி வெள்ளிகிழமை விளையாடப்படும் போது வரலாற்று நிகழ்வொன்று இடம்பெறும் என தெரிவித்துள்ள பாக்கிஸ்தான் அணியின் தலைவர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் இந்த வரலாற்றில் நிகழ்வில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எனது சொந்த மண்ணில் எனது அணிக்கு தலைமை தாங்குவது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமையும் எனவும்; சர்பராஸ் அகமட் தெரிவித்துள்ளார்.