Fri. Apr 19th, 2024

இலங்கையில் 24 பேரை தாக்கிய கருப்பு பூஞ்சை நோய், நீரிழிவு நோய் உள்ளவர்களை அதிகம் தாக்கும்

பொதுவாக ‘கறுப்பு பூஞ்சை’ என்று அழைக்கப்படும் ‘மியூகோமைகோசிஸ்’ என பெயரிடப்பட்ட இருபத்தி நான்கு தொற்றுகள் இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவாகியுள்ளன, ஆனால் அவை எதுவும் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்படவில்லை என்று மருத்துவ நிபுணர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் மருத்துவ டாக்டர் பிரிமாலி ஜெயசேகர இதை தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்தார்.
ஆண்டுதோறும் இந்த நோய் தாக்கம் பதிவாகி வருவதால் இது இலங்கைக்கு அன்னியமான நோயல்ல என்றும் அவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் 42 நோயாளிகளும் 2020 ஆம் ஆண்டில் 24 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபிக்குப் பிறகு நியூட்ரோபெனிக் நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பு, திட உறுப்பு மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று நோயாளிகள் மற்றும் நீண்ட கால ஸ்டீராய்டு சிகிச்சையில் உள்ள நோயாளிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார் . மக்கள் தங்கள் நோயெதிர்ப்பு மண்டலங்களின் செயல்பாட்டு திறன் குறைக்கப்படும்போது இந்த நோயால் நோயால் பாதிக்கப்படுவார்கள்.

“இதுபோன்ற நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகையில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பலவீனமடையக்கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது எப்போதும் முக்கியம். இத்தகைய பாதிக்கப்படக்கூடிய மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கோவிட் -19 தொற்று ஏற்படாத வண்ணம் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக முக கவசங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கழுவிய பின் அறுவை சிகிச்சை மற்றும் கே.என் 95 முககவசங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதுடன் பாவித்த முக கவசங்களை மீண்டும் பாவிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்

“எப்படியிருந்தாலும் துணியால் செய்த முககவசங்களை பயன்படுதுவத்தை தவிர்க்கவேண்டும் . பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு நோயாளிகள், தோட்ட வேலைகள் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, ஏனெனில் நாசி வழியாக பூஞ்சை வித்திகள் உடலுக்குள் நுழைய முடியும், “என்று அவர் கூறினார்.
இந்த கருப்பு பூஞ்சை நோய் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நோயாளிகளுக்கு குருட்டுத்தன்மை, முக நரம்புகளில் பிரச்சினைகள் மற்றும் மரணம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்