Fri. Feb 7th, 2025

இலங்கையில் புதிய நடைமுறை , கடவுச்சீட்டு விண்ணப்பத்துடன் கருவிழியை அடையாளத்தகவல்கள் (Iris recognition)-குடிவரவு திணைக்களம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன்( iris scanner ) அடையாளம் காண்பதற்கான முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை (Iris recognition)

இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு தேவையான கருவிகள் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போலியான தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டை கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறுவதை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்