இலங்கையில் பிளாஸ்டிக்கு தடை ?..
தண்ணீர் போத்தல்களில் பாவிக்கப்படும் குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக்குகளை விரைவில் தடைசெய்யப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் அஜித் மன்னப்பெருமா தெரிவித்தார்.
தேவையில்லாத வகையில் தண்ணீர் போத்தல்களில் மூடிகள் ஒருவகை பிளாஷ்டிக்கால் சுற்றி மூடப்பட்டு விற்கப்படுகின்றன. இதன் தேவை என்னெவென்று ஒருவருக்கும் தெரியாது .இவை நிறம் ஊட்டப்பட்டு பாவிக்கப்படுவதால் இவை நீண்டகாலம் கெடாமல் நிலைத்திருக்கும் மற்றும் மீள் சுழற்சி செய்வதும் கடினம் . நிறம் ஊட்டப்பட்ட போத்தல்களை பவிக்கவேண்டாம் என்று எடுக்கப்பட முடிவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், தண்ணீர் போத்தல் உற்பத்தியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நிறம் ஊட்டப்பட்ட போத்தல்களை மீள் சுழற்சி செய்யமுடியாது . இதனால் தான் உற்பத்தியாளர்களை நிறம் இல்லாத போத்தல்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினோம். இருந்த போதிலும் மூடியை சுத்தி பாவிக்கப்படும் நிறம் ஊட்டப்பட்ட பிளாஸ்டிக் ஒருவித தேவையும் இல்லாமல் அனாவசியமாக பவிக்கப்படுவதால் அதனை மிக விரவில் தடை செய்ய உள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிடடார்
போத்தல்களை மீள் சுழற்சி செய்யும் புதிய முயற்சி ஒன்று அதிபரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்