இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் முதலீடு மற்றும் இராணுவ உதவிகளை இராணுவ தளபதியின் பதவிஏற்பு பாதிக்கும் -மீண்டும் எச்சரிக்கை,
மனித உரிமை குற்றசாட்டு சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரியை இராணுவத்தளபதியாக நியமித்தமை இலங்கையில் அமரிக்கா மேற்கொள்ளும் முதலீடுகள் மற்றும் இராணுவ தொடர்புகளை பாதிக்கும் என்று மூத்த அமெரிக்கா அதிகாரி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நியமிப்பானது இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். சில அரசியல் குழுக்கள் இந்த மாதிரி தேசியஉணர்ச்சியை பயன்படுத்துவதன் மூலம் அரசியல் இலாபங்களை பெற முயற்சிக்கிறார்கள். மனித உரிமை குற்றசாட்டுகளுடன் தொடர்புபடுத்தி மிகவும் சாட்ச்சிப்படுத்தப்பட ஒரு இராணுவ அதிகாரியை இதற்காக பயன்படுத்தியமை மிகவும் துரதிஷடவசமானது என்றும் அவர் கூறினார்.
இராணுவ அதிகாரியாக மனித உரிமை குற்றசாட்டு சுமத்தப்பட்டவர் உள்ளபோது, எங்களால் சில எல்லைகளை தாண்டி இராணுவ ஒத்துழைப்புக்களை இலங்கையுடன் செய்யமுடியாது. இப்படியான கட்டத்தில், முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்ய பயப்படுவார்கள், இந்த மாதிரியான அரசியல் நியமனங்கள் எதிர்காலத்தில் அரசியல் இஸ்திரத்தன்மையை உண்டுபண்ணும் என்பதால் என்று அவர் மேலும் தெரிவித்தார்
பெரு நகர போக்குவரத்துக்கு திட்டங்களை நவீனமயப்படுத்தலுக்காக அமெரிக்காவின் மில்லேனியம் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 480 மில்லியன் டொலர் நிதி உதவி கூட இதனால் பாதிப்படையும் என்றும் அவர் தெறிவித்தார்