மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்களில் கையெழுதிட்டார் ஜனாதிபதி

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இரன்டு கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நாடுகடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் இதுவரை எந்தவிதமான ஆவணங்களும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவில்லை என தகவல்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் 21,000 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நேற்றயதினம் வெளிவந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது . இந்நிலையிலேயே மைத்ரிபால சிறிசேன இது தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன